உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / கபடி: தமிழ் தலைவாஸ் வெற்றி

கபடி: தமிழ் தலைவாஸ் வெற்றி

ஐதராபாத்: புரோ கபடி லீக் தொடரின் தமிழ் தலைவாஸ் அணி, 44-29 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வென்றது.இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 11 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 20-17 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஆல் அவுட்டாக, தமிழ் தலைவாஸ் அணி 31-22 என அசத்தியது. முடிவில் தமிழ் தலைவாஸ் அணி, 44-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணியின் நரேந்தர், சச்சின் தலா 10 புள்ளி எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Karthikeyan
அக் 20, 2024 10:21

நேற்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் வென்றது தெலுகு டைட்டன்ஸ் அணியை


Karthikeyan
அக் 20, 2024 10:19

நேற்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் வென்றது தெலுகு டைட்டன்ஸ் அணியை?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை