உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / நடுவே வந்த நடுவர்

நடுவே வந்த நடுவர்

லண்டன்: வீரர்கள் இடையே பிரச்னை என்றால், நடுவர் தலையிட்டு சமாதானம் செய்வார். கொஞ்சம் வித்தியாசமாக நடுவர் குறுக்கே வந்ததால், 'பெனால்டி' வாய்ப்பு 'மிஸ்' ஆகியுள்ளது. லண்டனில் நடந்த இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட்-புல்ஹாம் அணிகள் மோதின. 33வது நிமிடத்தில் 'பெனால்டி' வாய்ப்பில் கோல் அடிக்க மான்செஸ்ட் யுனைடெட் கேப்டன் புருனோ பெர்னாண்டஸ் தயாரானார். நடுவர் கிறிஸ் கவனாக், திடீரென புருனோவை சுற்றி வந்தார். இதனால் மீண்டும் பந்தை உதைக்க நேர்ந்தது. அப்போது 'கோல் போஸ்ட்' மேலே பந்து பறக்க, 'பெனால்டி' வீணானது. போட்டி 1-1 என 'டிரா' ஆனது. புருனோ கூறுகையில்,''நடுவர் செயலால் கவனச்சிதறல் ஏற்பட்டது. தனது தவறுக்கு அவர் வருத்தம் தெரிவிக்காததால், கோபம் அடைந்தேன்,''என்றார். செரினாவுக்கு சரியான சவால்நியூயார்க்: அமெரிக்க சீனியர் வீராங்கனை செரினா வில்லியம்சிற்கு 44, வயது ஒரு 'நம்பர்' தான். அசராமல் விளையாடும் திறமை பெற்றவர். ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இவர் மீண்டும் ஒற்றையரில் களமிறங்க வேண்டுமென செர்பிய வீரர் ஜோகோவிச் விருப்பம் தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில்,''நான் ஒற்றையரில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளேன். இதனை முறியடிக்கும்படி செரினாவுக்கு சவால் விடுக்கிறேன். இதை மறுக்க மாட்டார் என நினைக்கிறேன். அவரது துடிப்பான ஆட்டத்தை காண ஆர்வமாக காத்திருக்கிறேன்,''என்றார். 'வேகம்' எடுக்கும் ஹாமில்டன்ஆம்ஸ்டர்டாம்: 'பார்முலா-1' கார் பந்தயத்தில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் இந்த சீசனில் தடுமாறுகிறார். பெராரி அணிக்காக வரும் ஆக. 31ல் நடக்க உள்ள நெதர்லாந்து பந்தயத்தில் பங்கேற்க உள்ளார். இவர் கூறுகையில்,''கடினமான காலக்கட்டத்தில் இருந்து வலிமையாக மீண்டு வருவேன். சிறிய ஓய்வுக்கு பின் வருவதால், இம்முறை களம் சூடு பிடிக்கும். இலக்கை நோக்கி சீறிப் பாய தயாராக உள்ளேன்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை