உள்ளூர் செய்திகள்

‘ரவுண்ட்–அப்’

மான்செஸ்டர் சிட்டி வெற்றி லிவர்பூல்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. லிவர்பூல் நகரில் நடந்த லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் மோதின. எர்லிங் ஹாலண்ட், டோகு, ராயன் செர்கி தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க, மான்செஸ்டர் சிட்டி அணி 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 6 போட்டியிலும் வென்ற மான்செஸ்டர் சிட்டி அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில், ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், பெல்ஜியத்தின் ஜிஜு பெர்க்ஸ் மோதினர். இதில் ஏமாற்றிய அல்காரஸ் 5–7, 6–7 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் 3–6, 7–5, 6–3 என, அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை தோற்கடித்தார். சீன வீராங்கனை முன்னேற்றம் பீஜிங்: பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சீனாவின் கின்வென் ஜெங், 54வது இடத்தில் இருந்து 23வது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த சீன ஓபனில் முதல் முறையாக கோப்பை வென்றார். இத்தொடரில் பைனல் வரை சென்ற ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, 5வது இடத்தில் இருந்து ‘நம்பர்–3’ இடத்தை கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை