உள்ளூர் செய்திகள்

‘ரவுண்ட்–அப்’

பி.எஸ்.ஜி., ‘ஹாட்ரிக்’ பாரிஸ்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து 72வது சீசன் நடக்கிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த லீக் போட்டியில், பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் (பிரான்ஸ், பி.எஸ்.ஜி.,), பார்சிலோனா (ஸ்பெயின்) அணிகள் மோதின. இதில் பி.எஸ்.ஜி., அணி 4–2 என்ற கோல் கணக்கில் தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்தது. மான்செஸ்டரில் நடந்த போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி (இங்கிலாந்து) 5–1 என, ஏதென்ஸ் அணியை (கிரீஸ்) வீழ்த்தியது. லிவர்பூல் அணி (இங்கிலாந்து) 4–3 என, வில்லாரியல் அணியை (ஸ்பெயின்) வென்றது. ‘நாக்–அவுட்’ சுற்றில் ஜெர்மனி சேல்: மொராக்கோவில், பெண்களுக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து (17 வயது) தொடர் நடக்கிறது. இதன் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் மொராக்கோ, ஜெர்மனி அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே அர்ஜென்டினாவை வீழ்த்திய ஜெர்மனி அணி (6 புள்ளி) ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா அணி 2–0 என நியூசிலாந்தை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ