உள்ளூர் செய்திகள்

‘ரவுண்ட்–அப்’

அல்காரஸ் ‘சாம்பியன்’

பாரிஸ்: பிரான்சில், ‘ஏ.டி.பி., 1000’ அந்தஸ்து பெற்ற பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் மோதினர். ஒரு மணி நேரம், 57 நிமிடம் நடந்த போட்டியில் அசத்திய அல்காரஸ் 7–6, 7–5 என வெற்றி பெற்று, இத்தொடரில் முதல் முறையாக சாம்பியன் ஆனார். இது, இந்த ஆண்டு அல்காரஸ் வென்ற 5வது பட்டம். தவிர இவர், ஏ.டி.பி., ஒற்றையரில் தனது 29வது பட்டத்தை தட்டிச் சென்றார்.கோகோ காப் வெற்றிஇந்தியன்வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன்வெல்ஸ் நகரில், உலகின் ‘டாப்–8’ வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ‘குரூப்–1’ லீக் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், ஜெசிகா பெகுலா மோதினர். இரண்டு மணி நேரம், 39 நிமிடம் நீடித்த போட்டியில் கோகோ காப் 6–4, 6–7, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.மான்செஸ்டர் யுனைடெட் ‘டிரா’லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த போட்டியில் ஆஸ்டன் வில்லா, மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. இரண்டாவது பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் மான்ஸ் செஸ்டர் யுனைடெட் அணி எழுச்சி பெற, போட்டி 4–4 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.பார்சிலோனா அணி அபாரம்மாட்ரிட்: ஸ்பெயினில், ‘லா லிகா’ கால்பந்து 96வது சீசன் நடக்கிறது. மாட்ரிட் நகரில் நடந்த லீக் போட்டியில், பார்சிலோனா, அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை நடந்த 12 போட்டிகளின் முடிவில் பார்சிலோனா (33 புள்ளி), ரியல் மாட்ரிட் (30), அத்லெடிகோ மாட்ரிட் (28) அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி