மேலும் செய்திகள்
ஐ.எஸ்.எல்., கால்பந்தில் சென்னை அணி ஏமாற்றம்
17-Oct-2026
பென் ஷெல்டன் வெற்றி டுரின்: இத்தாலியின் டுரின் நகரில், உலகின் ‘டாப்–8’ வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ‘குரூப்–1’ லீக் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் மோதினர். ஷெல்டன் 6–2, 3–6, 6–3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் ஸ்வெரேவ் 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் ரபேல் ஜோடாரை தோற்கடித்தார். ஸ்பெயின் அணிக்கு ‘ஷாக்’ மாட்ரிட்: ஐரோப்பிய அணிகளுக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து 5வது சீசன் நடக்கிறது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த லீக் போட்டியில், ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் மோதின. ஹாரி கேன், கோன்சா, ஒயிட் கைகொடுக்க இங்கிலாந்து அணி 3–2 என்ற கோல் கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ஸ்பெயின் அணிக்கு ஒயர்சபால், வில்லியம்ஸ் ஆறுதல் தந்தனர். தொடர்ச்சியாக 43 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்த ஸ்பெயினின் சாதனை பயணம் முடிவுக்கு வந்தது. பெல்ஜியம் வீரர் ஓய்வு ஆன்ட்வெர்ப்: பெல்ஜியம் கால்பந்து வீரர் ரோமெலு லுகாகு 33. நான்கு உலக கோப்பை, மூன்று ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடர்களில் பங்கேற்ற லுகாகு, 135 போட்டியில், 94 கோல் அடித்துள்ளார். சர்வதேச அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (146), அர்ஜென்டினாவின் மெஸ்ஸி (126), ஈரானின் அலி டேய் (108) ஆகியோருக்கு பின் 4வது இடத்தில் உள்ளார் லுகாகு. இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
17-Oct-2026