மேலும் செய்திகள்
சென்னை அணி ஏமாற்றம்: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
27-Oct-2026
ஷெல்டன் முன்னேற்றம் டுரின்: இத்தாலியின் டுரின் நகரில், உலகின் ‘டாப்–8’ வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ‘ஜான் மெக்கன்ரோ’ பிரிவு லீக் போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6–4, 7–6 என, பிரான்சின் ஆர்தர் பில்சை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 7–6, 7–5 என, ஸ்பெயினின் ரபேல் ஜோடாரை தோற்கடித்தார். ‘ஜான் மெக்கன்ரோ’ பிரிவில் முதலிரண்டு இடங்களை கைப்பற்றிய ஸ்வெரேவ், ஷெல்டன் அரையிறுதிக்கு முன்னேறினர். இதில் ஷெல்டன், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரசை சந்திக்கிறார். காலிறுதியில் பார்சிலோனா பார்சிலோனா: பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து 26வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில், பார்சிலோனா (ஸ்பெயின்), செர்வெட் செனோயிஸ் (சுவிட்சர்லாந்து) அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த பார்சிலோனா 6–0 என வெற்றி பெற்றது. மற்றொரு லீக் போட்டியில், இங்கிலாந்தின் ஆர்சனல் அணி 0–2 என, பிரான்சின் லியோன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இதுவரை விளையாடிய 5 போட்டியில், 4 வெற்றி, ஒரு ‘டிரா’ என, தலா 13 புள்ளிகளுடன் முதலிரண்டு இடத்தில் உள்ள பார்சிலோனா, லியோன்ஸ் அணிகள் காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்தன.
27-Oct-2026