உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியாவுக்கு மூன்று வெண்கலம் * சுலோவேனியா படகு வலித்தலில்...

இந்தியாவுக்கு மூன்று வெண்கலம் * சுலோவேனியா படகு வலித்தலில்...

லெக் பிளட்: சர்வதேச 'ரெகெட்டா' படகு வலித்தல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்று வெண்கலப் பதக்கம் கிடைத்தன.சுலோவேனியாவில் சர்வதேச 'ரெகெட்டா' படகு வலித்தல் போட்டி நடந்தது. பெண்கள் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியா சார்பில் பாரதி தேவி, பிரியா தேவி ஜோடி பங்கேற்றது. பந்தய துாரத்தை 7 நிமிடம், 23.84 வினாடி நேரத்தில் கடந்து மூன்றாவது இடம் பிடிக்க, இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஹங்கேரி, போலந்து அணிகள் முதல் இரு இடம் பெற்றன. பெண்களுக்கான நான்கு பேர் கொண்ட அணிகள் பிரிவில் இந்தியா சார்பில் குர்பானி கவுர், பூனம், டென்தென்தோய் தேவி, அலினா இணைந்து களமிறங்கினர். பந்தய துாரத்தை 7 நிமிடம், 04.99 வினாடி நேரத்தில் கடந்து, மூன்றாவது இடம் பெற்று, வெண்கலப் பதக்கம் பெற்றது இந்திய அணி. போலந்து சார்பில் பங்கேற்ற இரு அணிகள் தங்கம், வெள்ளி வென்றன.பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மலெயய்மா சானு (8 நிமிடம், 25.30 வினாடி) வெண்கலம் வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை