உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சஹாஜா ஜோடி அசத்தல்

சஹாஜா ஜோடி அசத்தல்

லெக்சிங்டன்: லெக்சிங்டன் டென்னிஸ் தொடரில் சஹாஜா ஜோடி சாம்பியன் ஆனது. அமெரிக்காவின் லெக்சிங்டனில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சஹாஜா, மொராக்கோவின் எல் ஜார்டி ஜோடி, உக்ரைனின் வலேரியா, தலாய்னா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை சஹாஜா ஜோடி 2–6 என இழந்தது. பின் அடுத்த செட்டை 7–5 என போராடி கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்க போட்டி ‘சூப்பர் டை பிரேக்கருக்கு’ சென்றது. இதை சஹாஜா ஜோடி 12–10 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 45 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சஹாஜா ஜோடி, 2–6, 7–5, 12–10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை