உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்திய ஜோடிக்கு தங்கம் * உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில்

இந்திய ஜோடிக்கு தங்கம் * உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில்

கெய்ரோ: ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் திவ்யான்ஷு, ஷாம்பவி ஜோடி உலக சாதனை படைத்து, தங்கம் கைப்பற்றியது. எகிப்தின் கெய்ரோவில், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்'/'பிஸ்டல்'/'ஷாட்கன்') தொடர் நடக்கிறது. 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் கலப்பு அணிகளுக்கான போட்டி நடந்தது. இதன் தகுதிச் சுற்றில் இந்தியாவின் சிராக் சர்மா (293 புள்ளி), வன்ஷிகா (289.17) ஜோடி, மொத்தம் 582 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு இந்திய ஜோடி மோகினி, ஹிமான்ஷு ஜோடி தகுதிச்சுற்றில் 568 புள்ளி எடுத்து, மூன்றாவது இடம் பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. தொடர்ந்து பைனலில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முடிவில் சிராக் (242.4), ஷாம்பவி (241.9) இணைந்து மொத்தம் 484.3 புள்ளி எடுத்து, முதலிடம் பெற்று தங்கம் கைப்பற்றினர். பெலாரசின் மிகிதா, பியட்ரோவா ஜோடி (467.6) வெள்ளி வென்றது. இந்தியாவின் மோகினி, ஹிமான்ஷு (407.4) ஜோடி மறுபடியும் மூன்றாவது இடம் பெற, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என, 14 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் தொடர்கிறது. பெலாரஸ் (2+2+3=7), பிரான்ஸ் (2+1+2=5) அடுத்த இரு இடத்தில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை