உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / துப்பாக்கிசுடுதல்: சுருச்சி தங்கம்

துப்பாக்கிசுடுதல்: சுருச்சி தங்கம்

முனிக்: ஜெர்மனியின் முனிக் நகரில் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டி நடக்கிறது. நேற்று பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் போட்டி நடந்தது.இந்தியா சார்பில் பங்கேற்ற சுருச்சி சிங் 19, தகுதிச்சுற்றில் 588 புள்ளி எடுத்து, 2வது இடம் பிடித்தார். ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலம் வென்ற மனு பாகர் (574), 25வது இடம் பிடித்து வெளியேறினார். பைனலில் கடைசி இரு வாய்ப்பு முன், சுருச்சி 2வது இடத்தில் இருந்தார். கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட சுருச்சி 241.9 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 'ஹாட்ரிக்' தங்கம்தனது முதல் இரு உலக கோப்பை தொடரில் (பியுனஸ் ஏர்ஸ், லிமா) முதலிடம் பிடித்த சுருச்சி, தற்போது தனிநபர் பிரிவில் 'ஹாட்ரிக்' தங்கம் கைப்பற்றி அசத்தினார். இத்தொடரில் இதுவரை 1 தங்கம், 2 வெண்கலம் வென்ற இந்தியா, பதக்க பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை