ஸ்கேட்டிங்: ஆனந்த்குமார் சாம்பியன்
ஆஸ்டெண்ட்: கிராண்ட் ப்ரீ ஸ்கேட்டிங்கில், இந்தியாவின் ஆனந்த்குமார் சாம்பியன் ஆனார்.பெல்ஜியத்தில் பிளாண்டர்ஸ் கிராண்ட் ப்ரீ ரோலர் ஸ்பீடு ஸ்கேட்டிங், 58 வது சீசன் நடந்தது. ஆண்களுக்கான 1000 மீ., ஸ்பிரின்ட் பிரிவில் இந்தியாவின் ஆனந்த்குமார் வேல்குமார் 23 (தமிழகம்), ஒரு நிமிடம், 24.275 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 500 மீ., பிரிவில் 42.948 வினாடியில் வந்த ஆனந்த்குமார், இரண்டாவது தங்கப்பதக்கம் வென்றார். 30,000 மீ., ரோடு பிரிவில் அசத்திய இவர், 43 நிமிடம், 25.450 வினாடி நேரத்தில் வந்து வெள்ளி கைப்பற்றினார். தவிர 10 கி.மீ., எலிம் பிரிவு (14:37.159), 5 கி.மீ., பாயின்ட்ஸ் பிரிவில் (6:59.911) வெண்கலம் வசப்படுத்தினார். 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் கைப்பற்றிய ஆனந்த்குமார், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.