உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பனிச்சறுக்கு: பவானி வெண்கலம்

பனிச்சறுக்கு: பவானி வெண்கலம்

கொரால்கோ: 'கிராஸ் கன்ட்ரி' பனிச்சறுக்கு போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்னை ஆனார் பவானி.சிலியில் 'கிராஸ் கன்ட்ரி' பனிச்சறுக்கு (இரு 'ஸ்டிக்குகளை' பயன்படுத்தி, சமமான பனிப்படர்ந்த பகுதியில் நடத்தல், சறுக்கி செல்லுதல்) போட்டி நடந்தது. 5 கி.மீ., பிரிவில் இந்தியா சார்பில் பவானி உட்பட 5 பேர் பங்கேற்றனர். தமிழகத்தை சேர்ந்த பவானி, 21 நிமிடம், 04.9 வினாடி நேரத்தில் வந்து, மூன்றாவது இடம் பெற்று, வெண்கலம் கைப்பற்றினார். மெக்சிகோவின் ரெஜினா மார்டினஸ் (17 நிமிடம், 13.6 வினாடி) முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். சிலியின் மார்டினா புளோரஸ் (17 நிமிடம், 16.4 வினாடி) இதையடுத்து சர்வதேச பனிச்சறுக்கு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட 'கிராஸ் கன்ட்ரி' போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என பெருமை பெற்றார் பவானி. அடுத்து நடந்த 1.3 கி.மீ., பிரீஸ்டைல் ஸ்பிரின்ட் போட்டியில் அசத்திய பவானி, மூன்றாவது இடம் பிடித்து, இத்தொடரில் இரண்டாவது வெண்கலம் கைப்பற்றினார். பவானி கூறுகையில்,'' சிலியில் நடந்த சர்வதேச பனிச்சறுக்கு தொடரில், 'கிராஸ் கன்ட்ரி' பிரிவில் களமிறங்கினேன். முதன் முறையாக பதக்கம் வென்றது 'திரில்லாக' இருந்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ