உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: காலிறுதியில் அபே சிங்

ஸ்குவாஷ்: காலிறுதியில் அபே சிங்

சூரிச்: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் அபே சிங் முன்னேறினார்.சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில், கிராஸ்ஹாப்பர் கோப்பை ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் டேவிட் பெர்னட்டை வீழ்த்திய இந்தியாவின் அபே சிங், 2வது சுற்றில் எகிப்தின் அலி அபு எலினெனை எதிர்கொண்டார். அபாரமாக ஆடிய அபே சிங் 2-0 (12-10, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இதில், உலகின் 'நம்பர்-4' எகிப்தின் கரீம் கவாத்தை எதிர்கொள்கிறார்.மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ரமித் டான்டன் 0-2 (6-11, 9-11) என, எகிப்தின் பாரெஸ் டெஸ்சவுகியிடம் தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை