ஸ்குவாஷ்: அபே சிங் அபாரம்
தோஹா: கத்தாரில் சர்வதேச கிளாசிக் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 35 வது இடத்திலுள்ள இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் அபே சிங், உலகின் 'நம்பர்-5' வீரர், முன்னாள் உலக சாம்பியன், எகிப்தின் கரிம் கவாத்தை எதிர்கொண்டார்.முதல் செட்டை 11-6 என கைப்பற்றிய அபே சிங், அடுத்த செட்டையும் 11-4 என எளிதாக வென்றார். மூன்றாவது செட்டை 1-11 என இழந்தார். நான்காவது செட்டில் போராடிய அபே சிங் 11-9 என வசப்படுத்தினார்.முடிவில் அபே சிங் 3-1 (11-6, 11-4, 1-11, 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.