ஸ்குவாஷ்: மூன்றாவது சுற்றில் அனாஹத்
கெய்ரோ: உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் எகிப்தில் நடக்கிறது. ஆசிய ஜூனியர் (19 வயது) சாம்பியன், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் அனாஹத் சிங், பெண்கள் ஒற்றையரில் நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்றார். இதில் பிரான்சின் இனஸ் குயோத்தை, 3-0 என (11-1, 11-6, 11-1) எளிதாக சாய்த்த அனாஹத், மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். 17 வயது பிரிவில் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்தியாவின் அனிகா, இரண்டாவது சுற்றில் 1-3 என (9-11, 12-10, 2-11, 7-11) அமெரிக்காவின் அலெக்சாண்ட்ராவிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ருத்ரா, 0-3 என (2-11, 5-11, 3-11) என கனடாவின் ஓசியன் மாவிடம் வீழ்ந்தார். இந்தியாவின் நவ்யா, ஆராத்யாவும் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தனர். ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் அரிஹந்த் 3-0 என (11-1, 11-9, 11-6) அயர்லாந்தின் ஆரோனை வென்றார். மற்ற இந்திய வீரர்கள் ஆர்யவீர், யூஷா மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.