சுருச்சி சிங் நம்பர்-1: துப்பாக்கி சுடுதல் ரேங்கிங்கில்
புதுடில்லி: துப்பாக்கி சுடுதல் தரவரிசையில் இந்திய வீராங்கனை சுருச்சி சிங் 'நம்பர்-1' இடம் பிடித்தார்.சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்.,) சார்பில், உலக தரவரிசை பட்டியல் வெளியானது. பெண்களுக்கான 'ஏர் பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் சுருச்சி சிங், 4162 புள்ளிகளுடன் முதன்முறையாக 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார். ஹரியானாவை சேர்ந்த சுருச்சி சிங் 19, இந்த ஆண்டு அர்ஜென்டினா, பெரு, ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடரில், தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் 3 தங்கம், கலப்பு அணிகள் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றார்.மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகர் (1988 புள்ளி) 5வது இடத்தில் உள்ளார்.பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொசிசன்ஸ்' பிரிவு தரவரிசையில் இந்தியாவின் சிப்ட் கவுர் சாம்ரா, 3034 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த சிப்ட் கவுர் சாம்ரா 23, இந்த ஆண்டு அர்ஜென்டினாவில் நடந்த தனிநபர் 25 மீ., 'ரைபிள்-3 பொசிசன்ஸ்' பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.