ஹர்மீத் தேசாய் சாம்பியன்
கரகாஸ்: சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் சாம்பியன் ஆனார்.வெனிசுலாவில் சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பைனலில் உலகத் தரவரிசையில் 90 வது இடத்திலுள்ள இந்தியாவின் ஹர்மீத் தேசாய், 149 வதாக உள்ள பிரான்சின் ஜோ செய்பிரைடை சந்தித்தார். இதில் ஹர்மீத் 3-0 என்ற நேர் கணக்கில் (11-7, 11-8, 11-6) வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.கலப்பு இரட்டையர் பிரிவில் ஹர்மீத் தேசாய், சக வீராங்கனை கிரித்விகா ஜோடி, பைனலில் கியூபாவின் டேனியலா, ஜார்ஜ் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி, 3-2 என்ற செட் கணக்கில் (8-11, 11-9, 11-8, 9-11, 11-5) வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் ஹர்மீத் தேசாய், முதித் ஜோடி காலிறுதியில் தோல்வியடைந்தது.