உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்திய ஜோடி சாம்பியன் * சர்வதேச டேபிள் டென்னிசில்

இந்திய ஜோடி சாம்பியன் * சர்வதேச டேபிள் டென்னிசில்

நெவ்செகிர்: துருக்கியில் சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில் பீடர் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஷர்மீத் தேசாய், யாஷஸ்வினி ஜோடி, துருக்கியின் அப்துல்லா, ஹராக் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்திய ஜோடி 12-10 என போராடி கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி 11-7 என வென்றது. அடுத்து 3வது செட்டையும் 11-7 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 3-0 என வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது. பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் தியா, யாஷஸ்வினி ஜோடி, மற்றொரு இந்திய ஜோடி ஆயிஹா, சுதிர்த்தாவை எதிர்கொண்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின் ஆயிஹா-சுதிர்த்தா ஜோடி, 3-2 என்ற செட் கணக்கில் (6-11, 11-9, 12-10, 5-11, 11-8) வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை