மேலும் செய்திகள்
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்
29-Nov-2024
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்
14-Nov-2024
அதிமுகவுக்கு தமிழிசை சொன்ன மெசேஜ்
12-Nov-2024
மீண்டும் முதல் இடம் பிடித்த Bumrah
28-Nov-2024
நொய்டா: புரோ கபடி லீக் போட்டியில் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணி 21-32 என டில்லியிடம் தோல்வியடைந்தது.இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. உ.பி., மாநிலம் நொய்டாவில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், டில்லி அணிகள் மோதின. முதல் பாதி 12-12 என சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணியினரை 'ஆல்-அவுட்' செய்த டில்லி அணி 20 புள்ளி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு 9 புள்ளி மட்டும் கிடைத்தது.ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 21-32 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. தமிழ் தலைவாஸ் அணிக்கு மொயின் ஷபாகி (8) ஆறுதல் தந்தார். டில்லி அணி சார்பில் நவீன் குமார் 11, கேப்டன் அஷு மாலிக் 5 புள்ளி பெற்றனர்.இதுவரை விளையாடிய 14 போட்டியில், 5 வெற்றி, ஒரு 'டை', 8 தோல்வி என 33 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி 9வது இடத்தில் உள்ளது. டில்லி அணி 43 புள்ளிகளுடன் (6 வெற்றி, 3 'டை', 5 தோல்வி) 8வது இடத்தில் உள்ளது. மற்றொரு லீக் போட்டியில் பாட்னா அணி 38-35 என்ற கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது.
29-Nov-2024
14-Nov-2024
12-Nov-2024
28-Nov-2024