மேலும் செய்திகள்
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் வெற்றி
22-Jan-2026
விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 7வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் தோல்வியடைந்தனர்.நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.ஏழாவது சுற்றில், 'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ், அனிஷ் கிரி மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 37வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். ஆறாவது சுற்றில் நாடிர்பெக்கிடம் (உஸ்பெகிஸ்தான்) வீழ்ந்த குகேஷ், தொடர்ந்து 2வது தோல்வியை பெற்றார்.மற்றொரு 7வது சுற்று போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (வெள்ளை), 52வது நகர்த்தலில் துருக்கியின் யாகிஸ் கான் எர்டோக்முசிடம் (கருப்பு) தோல்வியடைந்தார். இந்தியாவின் பிரக்ஞானந்தா (வெள்ளை), ஜெர்மனியின் மத்தியாஸ் புளூபாம் (கருப்பு) மோதிய 7வது சுற்று போட்டி 33வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் (கருப்பு) 50வது நகர்த்தலில் நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரெஸ்டிடம் (வெள்ளை) வீழ்ந்தார்.ஏழு சுற்றுகளின் முடிவில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (5.5 புள்ளி), ஜாவோகிர் சின்டாரோவ் (4.5) முதலிரண்டு இடங்களில் உள்ளனர். குகேஷ், அர்ஜுன், அனிஷ் கிரி தலா 3.0 புள்ளிகளுடன் 9வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
22-Jan-2026