வாலிபால்: ராகுல் ஆர்வம்
பனாஜி: பிரைம் வாலிபால் தொடருக்கான கோவா அணியின் இணை உரிமையாளரானார் ராகுல்.ஐதராபாத்தில், வரும் அக். 2-26ல் பிரைம் வாலிபால் லீக் (பி.வி.எல்.,) 4வது சீசன் நடக்கவுள்ளது. இதில் கோவா கார்டியன்ஸ் அணி முதன்முறையாக விளையாடுகிறது. இந்த அணிக்கு, உரிமையாளராக ராஜு சேகுரி உள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல், கோவா அணியின் இணை உரிமையாளரானார்.இதுகுறித்து ராகுல் கூறுகையில், ''பிரைம் லீக் தொடர், இந்தியாவில் வாலிபால் போட்டிக்கு திருப்புமுனையானது. வாலிபால் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இத்தொடரின் மூலம் இப்போட்டி மீதான ஆர்வம் இளம் விளையாட்டு நட்சத்திரங்களிடம் அதிகரிக்கும்,'' என்றார்.