உலக செஸ்: குகேஷ் ‘டிரா’
ஜெனிவா: உலக செஸ் சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் ‘டிரா’ செய்தார் குகேஷ். சர்வதேச செஸ் கூட்டமைப்பு (‘பிடே’) சார்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டி, நேற்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் துவங்கியது. மொத்த பரிசுத் தொகை ரூ. 23.37 கோடி. நடப்பு உலக சாம்பியன், ‘நம்பர்–26’ வீரர், இந்தியாவின் குகேஷ், 20, கேண்டிடேட்ஸ் தொடரில் சாதித்த, ‘நம்பர்–4’, உஸ்பெகிஸ்தானின் சிந்தாரோவ், 20, மோதுகின்றனர். ‘கிளாசிக்கல்’ முறையில் மொத்தம் 14 சுற்று நடக்க உள்ளன. இத்தொடரில் முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். நேற்று நடந்த முதல் சுற்றில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். சிந்தாரோவ், ‘பெர்லின் டிபன்ஸ்’ முறையில் விளையாடினார். இது, முதல் சுற்றிலேயே குகேஷிற்கு சிக்கலை தந்தது. முதல் ஒரு மணி நேரத்தில் 16 நகர்த்தல் தான் செய்தார் குகேஷ். அடுத்த நகர்த்தலுக்கு (17), 36 நிமிடம் எடுத்துக் கொண்டார். இருப்பினும், போட்டி துவக்கத்தில் இருந்து சமநிலையில் சென்றது. கடைசியில் 38 வது நகர்த்தலில் குகேஷ் ‘டிரா’ செய்தார். இருவரும் 0.5–0.5 புள்ளியுடன் சம நிலையில் உள்ளனர்.