உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

கனடா வீராங்கனை இலக்குகனடா நீச்சல் வீராங்கனை சம்மர் மெக்இன்டோஷ் 18. பாரிஸ் ஒலிம்பிக்கில் 3 தங்கம், ஒரு வெண்கலம் வென்றிருந்தார். இவர், சிங்கப்பூரில் நடக்கும் உலக அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் 5 தங்கம் வெல்ல விரும்புகிறார். கடந்த மாதம் 200, 400 மீ., தனிநபர் மெட்லே, 400 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் 3 உலக சாதனை படைத்திருந்தார்.காலிறுதியில் ரிபாகினாஅமெரிக்காவில் நடக்கும் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் விக்டோரியா எம்போகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.எக்ஸ்டிராஸ்* ஆஸ்திரேலிய தொடருக்கான இந்தியா 'ஏ' பெண்கள் அணியில் இருந்து போதிய உடற்தகுதி இல்லாததால் ஷ்ரேயங்கா பாட்டீல், பிரியா மிஷ்ரா விலகினர். கேப்டனாக ராதா யாதவ், துணை கேப்டனாக மின்னு மணி நியமிக்கப்பட்டனர்.* அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 5 'டி-20', 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்திய பெண்கள் அணி 3 'டி-20', ஒரே ஒரு டெஸ்டில் விளையாடும் என, இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்தது.* ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் நேபாளத்தின் திரிபுவன் ராணுவ அணியை வீழ்த்தியது.* சுவிட்சர்லாந்தில் நடக்கும் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் அர்ஜுன் காதே, விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி 3-6, 4-6 என போலந்தின் சிமோன் கீலன், பிலிப் பீக்சோங்கா ஜோடியிடம் தோல்வியடைந்தது.* பின்லாந்தில் நடக்கும் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் 2வது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் 6-2, 6-4 என நெதர்லாந்தின் மேக்ஸ் ஹூக்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.* நெதர்லாந்தில் நடக்கவுள்ள உலக ராக்கெட்லான் சாம்பியன்ஷிப் தொடரில் (ஜூலை 30 - ஆக. 3) பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக விக்ரமாதித்யா நியமிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி