உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

ஆஸ்திரேலியா அசத்தல்ஜெட்டா: சவுதி அரேபியாவில் நடக்கும் ஆசிய கோப்பை கூடைப்பந்து லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் கொரியா அணிகள் மோதின. இதில் அசத்திய ஆஸ்திரேலிய அணி 97-61 என்ற கணக்கில் (25-17, 23-14, 20-16, 29-14) வெற்றி பெற்றது.ஹங்கேரி கலக்கல்போட்கோரிகா: மான்டினேக்ரோவில் நடக்கும் பெண்களுக்கான (17 வயது) ஐரோப்பிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் ஹங்கேரி, நெதர்லாந்து அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஹங்கேரி அணி 30-28 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.சுவீடன் சூப்பர்கிசா: எகிப்தில் நடக்கும் ஆண்களுக்கான (19 வயது) உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் சுவீடன், குவைத் அணிகள் மோதின. இதில் சுவீடன் அணி 39-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஐஸ்லாந்து அணி 41-19 என கினியாவை வீழ்த்தியது.மெக்சிகோ அபாரம்ஆரஞ்செஸ்டாட்: அருபாவில் நடக்கும் ஆண்களுக்கான (15 வயது) 'கான்ககப்' கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் மெக்சிகோ, எல் சால்வடார் அணிகள் மோதின. இதில் மெக்சிகோ அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.எக்ஸ்டிராஸ்* ஆந்திராவின் காக்கிநாடாவில் நடக்கும் ஜூனியர் பெண்களுக்கான தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் தமிழக அணி 5-0 என்ற கோல் கணக்கில் அருணாச்சல பிரதேச அணியை வீழ்த்தியது. தமிழகத்தின் பிரியதர்ஷினி 2 கோல் அடித்தார்.* அசாமில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் பஞ்சாப், இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை (ஐ.டி.பி.எப்.,) அணிகள் மோதின. இப்போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.* இந்தோனேஷியாவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் சகவீரர் கபிர் ஹான்சை வீழ்த்தினார்.* ஆசிய கோப்பை கால்பந்து (17 வயது, சவுதி அரேபியா, 2026, ஆக. 9-23) தொடருக்கான தகுதிச் சுற்று, வரும் நவ. 22-30ல் ஆமதாபாத்தில் நடக்கவுள்ளது.* ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், வரும் ஆக. 10ல் 'வேர்ல்டு அத்லெடிக்ஸ் கான்டினென்டல் டூர்' போட்டி நடக்கவுள்ளது. இதற்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் சச்சின் யாதவ், யாஷ்விர் சிங் பங்கேற்கின்றனர்.* தாய்லாந்தில் நடக்கும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (22 வயது) பைனலுக்கு இந்தியாவின் நீரஜ் (75 கி.கி.,), இஷான் கடாரியா (90+ கி.கி.,), யாத்ரி படேல் (பெண்கள் 57 கி.கி.,), பிரியா (பெண்கள் 60 கி.கி.,) முன்னேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை