உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

மாரத்தானில் சாதனைசிட்னி: சிட்னி மாரத்தான் ஓட்டத்தில், எத்தியோபிய வீரர் கிரோஸ் (2 மணி நேரம், 6 நிமிடம், 6 வினாடி), நெதர்லாந்து வீராங்கனை சிபான் ஹாசன் (2 மணி நேரம், 18 நிமிடம், 22 வினாடி) முதலிடம் பிடித்தனர். இருவரும், ஆஸ்திரேலிய மண்ணில் இலக்கை அதிவேகமாக கடந்து சாதனை படைத்தனர்.அமெரிக்கா-ஆஸி., 'டிரா'லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக கோப்பை ரக்பி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 31-31 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.பிரான்ஸ் கலக்கல்கடோவிஸ்: போலந்தில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து லீக் போட்டியில் பிரான்ஸ் அணி 103-95 என்ற கணக்கில் சுலோவேனியாவை வீழ்த்தியது. ஏற்கனவே பெல்ஜியத்தை தோற்கடித்த பிரான்ஸ் அணி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.சீனா ஏமாற்றம்பாங்காக்: தாய்லாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக வாலிபால் சாம்பியன்ஷிப் 'ரவுண்டு-16' போட்டியில் சீனா, பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய சீன அணி 1-3 (20-25, 25-27, 25-22, 20-25) என்ற கணக்கில் தோல்வியடைந்தது.எக்ஸ்டிராஸ்* புனேயில் நடந்த ஜூனியர் சர்வதேச பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இரட்டையர் பைனலில் இந்தியாவின் அனன்யா பிஷ்ட், ஏஞ்சல் புனேரா ஜோடி 21-23, 21-12, 21-17 என, ஜப்பானின் பன்னோ, யூசூ யூனோ ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.* ஹாக்கி இந்தியா லீக் (ஹெச்.ஐ.எல்.,) தொடருக்கான போட்டிகள் மூன்று நகரங்களில் நடத்தப்படும் என, ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் திலிப் டிர்கே தெரிவித்தார்.* தஜிகிஸ்தானில் இன்று நடக்கும் நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் தஜிகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, மீண்டும் அசத்தினால் பைனலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை