உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

சியாட்டில் 'சாம்பியன்'வாஷிங்டன்: வாஷிங்டனில் நடந்த லீக்ஸ் கோப்பை கால்பந்து பைனலில் சியாட்டில் சவுண்டர்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில், இன்டர் மயாமி அணியை வீழ்த்தி, முதன்முறையாக கோப்பை வென்றது. மயாமி வீரர் மெஸ்ஸி, ஒரு கோல் கூட அடிக்கவில்லை.காலிறுதியில் பிரேசில்பாங்காக்: தாய்லாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக வாலிபால் சாம்பியன்ஷிப் 'ரவுண்டு-16' போட்டியில் பிரேசில், டொமினிகன் குடியரசு அணிகள் மோதின. இதில் பிரேசில் அணி 3-1 (18-25, 25-12, 25-20, 25-12) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.நியூசிலாந்து கலக்கல்லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக கோப்பை ரக்பி லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 62-19 என்ற கணக்கில் ஜப்பானை தோற்கடித்தது. முதல் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்திய நியூசிலாந்து, 2 வெற்றியுடன் காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது.ஜப்பான் அசத்தல்உலான்பாடர்: மங்கோலியாவில் நடக்கும் ஆசிய கோப்பை கூடைப்பந்து (16 வயது) லீக் போட்டியில் ஜப்பான் அணி 78-58 என்ற கணக்கில் சவுதி அரேலியாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஈரான் அணி 90-41 என, கஜகஸ்தானை தோற்கடித்தது.எக்ஸ்டிராஸ்* சமீபத்தில் பிரிமியர் லீக் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கவுள்ள சர்வதேச லீக் 4வது சீசனில் (டிச. 2 - 2026, ஜன. 4) விளையாட திட்டமிட்டுள்ளார். இதற்காக, வரும் செப். 30ல் நடக்கவுள்ள வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தார்.* ஆமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலை., மைதானத்தில், வரும் டிச. 9-14ல் டென்னிஸ் பிரிமியர் லீக் 7வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.* அமெரிக்காவின் நார்டனில் நடந்த பெண்களுக்கான எல்.பி.ஜி.ஏ., டூர் கோல்ப் தொடரில், இந்திய வீராங்கனை அதிதி 32வது இடத்தை பகிர்ந்து கொண்டார். சீனாவின் மிராண்டா வாங் சாம்பியன் ஆனார்.* பெண்களுக்கான ஆசிய கிளப் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தகுதிச் சுற்றில் விளையாடிய 2 போட்டியில், ஒரு வெற்றி, ஒரு 'டிரா' என 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த ஈஸ்ட் பெங்கால் அணி, பிராதன சுற்றுக்குள் நுழைந்தது.* இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேமி ஓவர்டன் 31, டெஸ்ட் உள்ளிட்ட 'ரெட்பால்' கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காலவரையற்ற ஓய்வு எடுக்கப்போவதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ