உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

பைனலில் துருக்கி - இத்தாலிபாங்காக்: தாய்லாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக வாலிபால் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் ஜப்பான், துருக்கி அணிகள் மோதின. இதில் துருக்கி அணி 3-1 (16-25, 25-17, 25-18, 27-25) என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் இத்தாலி அணி 3-2 என, பிரேசில் அணியை வீழ்த்தியது. பைனலில் (செப். 7) துருக்கி, இத்தாலி அணிகள் விளையாடுகின்றன.சுவீடன் ஏமாற்றம்ரிகா: லாட்வியாவில் நடந்த 'யூரோ' கூடைப்பந்து 'ரவுண்டு-16' போட்டியில் சுவீடன், துருக்கி அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய சுவீடன் அணி 79-85 (23-20, 19-17, 13-26, 24-22) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.ஆஸ்திரேலியா அசத்தல்டார்வின்: ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஓசியானியா கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலிய அணி 1-0 என, நியூசிலாந்தை தோற்கடித்தது.கனடா கலக்கல்லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பெண்கள் உலக கோப்பை ரக்பி தொடருக்கான லீக் போட்டியில் கனடா அணி 33-19 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. ஏற்கனவே பிஜி, வேல்சை தோற்கடித்த கனடா, 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.எக்ஸ்டிராஸ்* மும்பையில், வரும் செப். 28ல் இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இதில் பி.சி.சி.ஐ., புதிய தலைவர், பிரிமியர் லீக் தொடரின் புதிய சேர்மன் தேர்வு செய்யப்பட உள்ளனர்.* ஜெய்ப்பூரில் நடந்த இந்திய ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் ஆண்கள் பைனலில் (19 வயது) யூஷா நபீஸ் 3-2 என, ரச்சித் ஷாவை வீழ்த்தினார். பெண்கள் பைனலில் (19 வயது) ருத்ரா சிங் 3-0 என வியோமிகாவை தோற்கடித்தார்.* டில்லியில், தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2வது சீசன் இன்று துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' மானுஷ் ஷா, பயாஸ் ஜெயின், அனுஷா, தியா, ஸ்வஸ்திகா, யாஷஸ்வினி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை