உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

பெல்ஜியம் கலக்கல்பாசே: பிலிப்பைன்சில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் பெல்ஜியம், உக்ரைன் அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் 3-0 (25-16, 25-17, 25-22) என வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா அணி 3-2 (19-25, 18-25, 25-22, 25-22, 15-11) என, பின்லாந்திடம் தோல்வியடைந்தது.அரையிறுதியில் கனடாலண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக கோப்பை ரக்பி காலிறுதியில் கனடா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் கனடா அணி 46-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அரையிறுதியில் (செப். 19) கனடா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.ரியல் மாட்ரிட் வெற்றிபார்சிலோனா: ஸ்பெயினில் நடக்கும் 'லா லிகா' கோப்பை கால்பந்து லீக் போட்டியில், எம்பாப்பே ஒரு கோல் அடித்து கைகொடுக்க ரியல் மாட்ரிட் அணி 2-1 என ரியல் சோசிடாட் அணியை வீழ்த்தியது. ரியல் மாட்ரிட் அணி 12 புள்ளிகளுடன் (4 வெற்றி) முதலிடத்துக்கு முன்னேறியது.அர்ஜென்டினா அசத்தல்ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் பைனலுக்கான தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஜப்பானில் நடந்த போட்டியில் ஜெர்மனி அணி 4-0 என, ஜப்பானை வீழ்த்தியது. பிரான்ஸ் அணி 3-1 என, குரோஷியாவை வென்றது.எக்ஸ்டிராஸ்* எகிப்து ஓபன் ஸ்குவாஷ் 2வது சுற்றில் இந்தியாவின் அபய் சிங் 1-3 (4-11, 10-12, 11-5, 7-11) என்ற கணக்கில் எகிப்து வீரர் யூசுப் இப்ராஹிமிடம் தோல்வியடைந்தார்.* சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் (அக். 9, 14) பங்கேற்கும் 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணியில் சுனில் செத்ரி, கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து, அன்வர் அலி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.* பிரான்சில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பைனலில் இந்தியாவின் ருதுஜா போசலே, பிரிட்டனின் நைக்தா பெயின்ஸ் ஜோடி 6-2, 1-6, 10-6 என ரஷ்யாவின் பொலினா இட்சென்கோ, சோபியா லான்செரே ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.* ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான 2, 3வது ஒருநாள் போட்டியில் (அக். 3, 5, இடம்: கான்பூர்) பங்கேற்கும் இந்தியா 'ஏ' அணிக்கு அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, ஹர்ஷித் ராணா தேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !