உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

இத்தாலி 'சாம்பியன்'ஷென்சென்: சீனாவில் நடந்த பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் பைனலில் அமெரிக்கா, இத்தாலி அணிகள் மோதின. ஜாஸ்மின் பாவோலினி இடம் பெற்ற இத்தாலி அணி 2-0 என வெற்றி பெற்று, 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.கென்ய வீரர் முதலிடம்பெர்லின்: ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த சர்வதேச மாராத்தான் ஓட்டத்தில், இலக்கை 2 மணி நேரம், 2 நிமிடம், 16 வினாடியில் கடந்த கென்ய வீரர் செபாஸ்டியன் சவே 29, முதலிடம் பிடித்தார். பெண்கள் பிரிவில் கென்யாவின் ரோஸ்மேரி வஞ்சிரு (2 மணி நேரம், 21 நிமிடம், 05 வினாடி) முதலிடத்தை கைப்பற்றினார்.இங்கிலாந்து கலக்கல்பிரிஸ்டோல்: இங்கிலாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக கோப்பை ரக்பி அரையிறுதியில் இங்கிலாந்து அணி 35-17 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தியது. லண்டனில் வரும் செப். 27ல் நடக்கவுள்ள பைனலில் இங்கிலாந்து, கனடா அணிகள் மோதுகின்றன.அர்ஜென்டினா அதிர்ச்சிபாசே: பிலிப்பைன்சில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் 'ரவுண்டு-16' போட்டியில் அர்ஜென்டினா அணி 0-3 (23-25, 20-25, 22-25) என்ற கணக்கில் இத்தாலியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் போலந்து அணி 3-1 என, கனடாவை வீழ்த்தியது.எக்ஸ்டிராஸ்* டில்லியில், வரும் செப். 29ல் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் 30வது சீசன் துவங்குகிறது.* கோல்கட்டாவில், பெங்கால் கிரிக்கெட் சங்க (சி.ஏ.பி.,) ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் சி.ஏ.பி., தலைவராக, முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி 53, போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார்.* ஜெய்ப்பூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'திவ்யம் கிரிக்கெட் விருது' முதன்முறையாக வழங்கப்பட்டது. இதில் வாழ்நாள் சாதனையாளர் விருதை ரவிந்திரா பாட்டீல் (மும்பை), ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை ராஜேஷ் கண்ணுார் (மும்பை) வென்றனர்.* சீனாவில் நடந்த ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன் சீரிஸ், 5-6வது இடத்துக்கான 'பிளே-ஆப்' போட்டியில், இந்திய பெண்கள் அணி 10-17 என, கஜகஸ்தானிடம் தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை