உலக விளையாட்டு செய்திகள்
மெல்னிகோவா 'தங்கம்'ஜகார்தா: இந்தோனேஷியாவில், உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 'ஆல்-அரவுண்டு' பைனலில் அசத்திய முன்னாள் உலக சாம்பியன் ரஷ்யாவின் ஏஞ்சலினா மெல்னிகோவா (55.066 புள்ளி) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.ஸ்பெயின் தகுதிசாலே: மொராக்கோவில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 9வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் ஸ்பெயின் அணி 5-0 என தென் கொரியாவை வீழ்த்தியது. தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த ஸ்பெயின், 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்தது.பிரேசில் கலக்கல்அசுன்சியன்: பராகுவேயில் நடக்கும் 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தென் அமெரிக்க கூடைப்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் பிரேசில் அணி 74-49 என, உருகுவேயை வீழ்த்தியது. அர்ஜென்டினா அணி 65-35 என்ற கணக்கில் ஈகுவடாரை வென்றது.மாட்ரிட் 'ஹாட்ரிக்'மாட்ரிட்: ஸ்பெயினில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), யுவென்டஸ் (இத்தாலி) அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.எக்ஸ்டிராஸ்* பிரிமியர் லீக் 'டி-20' தொடருக்கான பஞ்சாப் அணியின் சுழற்பந்துவீச்சு பவுலிங் பயிற்சியாளராக, முன்னாள் இந்திய வீரர் சாய்ராஜ் பஹுதுலே 52, நியமிக்கப்பட்டார்.* பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் 'ரவுண்டு-16' போட்டியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 14-21, 11-21 என சீனாவின் வாங் ஜியிடம் தோல்வியடைந்தார்.