உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / டுப்ளான்டிஸ் உலக சாதனை * உலக தடகள போல் வால்ட் போட்டியில்...

டுப்ளான்டிஸ் உலக சாதனை * உலக தடகள போல் வால்ட் போட்டியில்...

டோக்கியோ: போல் வால்ட் போட்டியில் புதிய உலக சாதனை படைத்தார் சுவீடனின் டுப்ளான்டிஸ். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், உலக தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன் நடக்கிறது. உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் களமிறங்குகின்றனர். ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில் ஒலிம்பிக்கில் இரண்டு முறை (2020, 2024) தங்கம் வென்ற சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ் 25, பங்கேற்றார். தகுதிச்சுற்றில் 5.74 மீ., தாவி பைனலுக்குள் நுழைந்தார். நேற்று நடந்த பைனலில் 6.15 மீ., உயரம் தாவி, தங்கம் கைப்பற்றினார். கிரீசின் கராலிஸ் எம்மானுயல் (6.00 மீ.,) இரண்டாவது இடம், ஆஸ்திரேலியாவின் கர்டிஸ் மார்ஷல் (5.95 மீ.,) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.புதிய சாதனைபின் சாதனை முயற்சியாக 6.30 மீ., உயரம் தாவி அசத்தினார். இதையடுத்து 'போல் வால்ட்' போட்டியில் 14வது முறையாக உலக சாதனை படைத்தார். இதற்கு முன் ஹங்கேரியில், கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டியில் (ஆக. 13) அதிகபட்சமாக 6.29 மீ., உயரம் தாவி, சாதனை படைத்திருந்தார். ஸ்ரீசங்கர் ஏமாற்றம்ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டி தகுதிச்சுற்று நடந்தது. இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர், 7.78 மீ., மட்டும் தாண்டி, ஒட்டுமொத்தமாக 25வது இடம் பெற்றார். பைனல் வாய்ப்பை இழந்தார். பெண்களுக்கான 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் போட்டி நடந்தது. இந்தியாவின் பாருல் சவுத்ரி 20 (9 நிமிடம், 12.46 வினாடி), அன்கிதா 35 வது (9 நிமிடம், 18.00 வினாடி) இடம் பெற்று வெளியேறினர். ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் தேஜாஸ் ஷிர்சே (13.57 வினாடி), 29 வது இடம் பெற்று, அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.'ஹாட்ரிக்' தங்கம்உலக தடகள சாம்பியன்ஷிப், போல் வால்ட் போட்டியில் கடந்த 2022, 2023, தற்போது 2025 என தொடர்ந்து மூன்று முறை அசத்திய டுப்ளான்டிஸ், 'ஹாட்ரிக்' தங்கம் கைப்பற்றினார். தவிர 2019ல் வெள்ளி வென்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை