உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / முதல் தங்கம் வென்றார் ஷைலேஷ் * உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில்...

முதல் தங்கம் வென்றார் ஷைலேஷ் * உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில்...

புதுடில்லி: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்தார் உயரம் தாண்டுதல் வீரர் ஷைலேஷ்.இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் 'டி 63' பிரிவு பைனல் நடந்தது. இந்திய வீரர் ஷைலேஷ் குமார் அதிகபட்சம் 1.91 மீ., உயரம் தாண்டி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இப்போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இது.இப்பிரிவில் உலக சாதனை படைத்தவர் அமெரிக்காவின் எஜ்ரா பிரெச் (1.97 மீ.,). இம்முறை முதல் வாய்ப்பில் 1.85 மீ., உயரம் தாண்டிய இவருக்கு, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் மற்றொரு வீரர் வருண் சிங், 1.85 மீ., உயரத்தை மூன்றாவது வாய்ப்பில் தாண்டி, வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார். 1.78 மீ., மட்டும் தாண்டிய இந்தியாவின் ராகுல், நான்காவது இடம் பிடித்தார்.தீப்தி 'வெள்ளி'பெண்களுக்கான 400 மீ., (டி 20) ஓட்டம் தகுதிச்சுற்று நடந்தது. இரண்டாவது 'ஹீட்டில்' பங்கேற்ற இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி, 58.35 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலில் தீப்தி, முதல் 300 மீ., துாரம் வரை முன்னிலையில் இருந்தார். கடைசி நேரத்தில் பின்தங்கிய இவர், 55.16., வினாடி நேரத்தில் கடந்தார். நடப்பு சீசனில் தீப்தியின் சிறந்த ஓட்டமாக இது அமைந்தது. இருப்பினும் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். கடைசி 100 மீ., துாரத்தில் முந்திய துருக்கியின் அய்செல் (54.51) தங்கம் கைப்பற்றினார்.ஆண்களுக்கான குண்டு எறிதல் (எப் 37) போட்டியில் இந்திய வீரர் மானு, அதிகபட்சம் 13.43 மீ., துாரம் மட்டும் எறிந்து, 9 வது இடம் பிடித்தார்.பெண்களுக்கான வட்டு எறிதலில் கன்சன் லஹானி, அதிகபட்சம் 9.68 மீ., மட்டும் எறிந்து, 5வது இடம் பெற்றார். பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் பாவனாபென் 35.34 மீ., துாரம் எறிந்து, 8வது இடம் பெற்றார்.பைனலில் ராகேஷ்பாய்ஆண்களுக்கான 100 மீ., டி 37 பிரிவு தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் ராகேஷ்பாய் (11.62 வினாடி), ஷ்ரேயான்ஷ் திரிவேதி (11.94) என இருவரும் பைனலுக்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ