உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / வருவாரா ஜேக் டிரேப்பர்

வருவாரா ஜேக் டிரேப்பர்

மெல்போர்ன்: உலக டென்னிஸ் 'ரேங்கிங்' பட்டியலில் 10வது இடத்தில் உள்ள பிரிட்டனின் ஜேக் டிரேப்பர் காயத்தால் அவதிப்படுகிறார். இவர் கூறுகையில்,''இடது கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் (2026, ஜன.18-பிப்.7) பங்கேற்க வாய்ப்பு இல்லை. கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற இத்தொடரை 'மிஸ்' செய்வது துரதிருஷ்டவசமானது. விரைவில் முழு உடற்தகுதி பெற்று டென்னிஸ் போட்டிக்கு திரும்புவேன்,''என்றார்.மான்செஸ்டர் அணி அசத்தல்லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி, நியூகேசில் அணியை 1-0 என வீழ்த்தியது. மான்செஸ்டர் அணியின் 21 வயது இளம் வீரர் பாட்ரிக் டோர்கு, 15 மீ., துாரத்தில் இருந்து இடது காலால் கோல் அடித்து (24வது நிமிடம்) வெற்றிக்கு கைகொடுத்தார். பயிற்சியாளர் திடீர் மரணம்டாக்கா: வங்கதேச பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் டாக்கா கேப்பிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் மெஹபூப் அலி ஜாகி, 59. சிறந்த வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக திகழ்ந்தார். நேற்று சைல்ஹட் சர்வதேச மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட, ஆம்புலன்ஸ் மூலம் ஹராமெய்ன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவரது மறைவு வங்கதேச கிரிக்கெட் அரங்கில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.எக்ஸ்டிராஸ்* இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் பெண்களுக்கான (19 வயதுக்கு உட்பட்ட) 'ஒன் டே டிராபி' தொடர் நடத்தப்படுகிறது. புனேயில் நடந்த காலிறுதியில் மகாராஷ்டிரா அணி (177/4), டில்லி அணியை (175/10) 6 விக்கெட்டில் வீழ்த்தியது.* நெதர்லாந்தில் குரோனிங்கென் செஸ் தொடர் நடக்கிறது. ஐந்து சுற்று முடிவில் இந்தியாவின் சஞ்சய் நாராயணன் (4.5), ஜெர்மனியின் எலியாஸ் (4.5) முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். விக்னேஷ் (4.0) 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.* இலங்கையில் நடந்த சர்வதேச கோல்ப் தொடரில் இந்தியாவின் ஜீவ் மில்கா சிங் கோப்பை வென்றார். தொழில்ரீதியிலான தொடரில் 13 ஆண்டுக்குப் பின் வென்ற முதல் கோப்பை இது.* ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் இரண்டாவது சீசன் இன்று துவங்குகிறது. ராஞ்சி, சூர்மா, ஒடிசா, எஸ்.ஜி பைப்பர்ஸ் என 4 அணிகள் பங்கேற்கின்றன. * பெண்களுக்கான கால்பந்து உலகத் தரவரிசையில் இந்திய அணி 63ல் இருந்து 67வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த ஆண்டு பங்கேற்ற 13 போட்டியில் 6ல் தோற்றுள்ளது. ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மனி அணிகள் 'டாப்-3' இடத்தில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி