உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மல்யுத்தம்: அமன் தகுதி நீக்கம்

மல்யுத்தம்: அமன் தகுதி நீக்கம்

ஜாக்ரெப்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் அதிக எடை காரணமாக இந்திய வீரர் அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.குரோஷியாவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் அமன் ஷெராவத் களமிறங்கினார். பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெண்கலம் வென்ற அமன், போட்டிக்கு முந்தைய எடை சோதனையில் பங்கேற்றார். அப்போது 1.7 கிலோ எடை கூடுதலாக இருப்பது தெரியவர, போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.இது தெரியாதாகடந்த 2023 மல்யுத்த கூட்டமைப்பு விதிப்படி, உலக கோப்பை, ரேங்கிங் தொடர்களில் 2 கிலோ வரை கூடுதலாக அனுமதிக்கப்படுகிறது. ஆனால் உலக சாம்பியன்ஷிப்பில் இதற்கு அனுமதி கிடையாது.இத்தொடருக்காக கடந்த ஆக. 25ல் ஜாக்ரெப் சென்றார் அமன் 22. கடந்த 20 நாளாக சக வீரர்களுடன் தங்கி இருந்து, பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் சரியான எடையை பாராமரிக்காமல் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பல்கேரியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் (20 வயது), இந்திய வீராங்கனை நேஹா (59) கூடுதல் எடை காரணமாக வெளியேற்றப்பட்டார். தற்போது, மீண்டும் இதுபோல நடந்துள்ளது.ஏற்கனவே பாரிஸ் ஒலிம்பிக்கில், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால், இந்தியாவின் வினேஷ் போகத், பைனலில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.தீபக் ஏமாற்றம்ஆண்கள் 92 கிலோ பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தீபக் புனியா, 3-4 என ஓஸ்மனிடம் (அஜர்பெய்ஜான்) வீழ்ந்தார்.ரூ. 8 லட்சம்இந்திய அணி பயிற்சியாளர் ஒருவர் கூறுகையில்,'' உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க, ஒவ்வொரு இந்திய நட்சத்திரங்களுக்கும் அரசு ரூ. 8 லட்சம் செலவிட்டது. குரோஷியாவில் தங்குவதற்கு (நாள் ஒன்றுக்கு ரூ. 15,000), போட்டியின் போது பயிற்சிக்கு (ரூ. 20,000) என இரண்டு வாரம் செலவையும் அரசு செய்கிறது. ஆனால் எடை விஷயத்தில் வீரர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்டதை விட 1.7 கிலோ அதிகம் என்பதை ஏற்கவே முடியாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை