மேலும் செய்திகள்
உலக வில்வித்தை: பைனலில் இந்தியா
06-Sep-2025
பைல்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்-1' போட்டியில் அசத்திய இந்தியா 3-1 என, சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.சுவிட்சர்லாந்தில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ், 'வேர்ல்டு குரூப்-1' போட்டியில் இந்தியா, சுவிட்சர்லாந்து அணிகள் விளையாடின. ஒற்றையர் பிரிவு முதலிரண்டு போட்டியில் இந்தியாவின் தக் ஷினேஸ்வர் சுரேஷ், சுமித் நாகல் வெற்றி பெற்றனர்.இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ரித்விக் சவுத்ரி ஜோடி, 7-6, 4-6, 5-7 என சுவிட்சர்லாந்தின் டொமினிக் ஸ்டிரைக்கர், ஜாகுப் பால் ஜோடியிடம் தோல்வியடைந்தது.அடுத்து நடந்த மாற்று ஒற்றையர் முதல் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், சுவிட்சர்லாந்தின் ஹென்றி பெர்னெட் மோதினர். அபாரமாக ஆடிய சுமித் நாகல் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு டேவிஸ் கோப்பையில் இந்திய அணி, பைனலுக்கான தகுதிச் சுற்றில் விளையாடும். தவிர, 32 ஆண்டுகளுக்கு பின் ஐரோப்பிய மண்ணில் நடந்த டேவிஸ் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடைசியாக 1993ல் பிரான்சில் நடந்த போட்டியில் பயஸ், ரமேஷ் கிருஷ்ணன் இடம் பெற்றிருந்த இந்திய அணி 3-2 என, பிரான்சை வீழ்த்தியது.
06-Sep-2025