உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / பைனலில் இந்திய ஜோடி

பைனலில் இந்திய ஜோடி

டாஸ்டே: ஸ்பெயினில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ருடுஜா போசாலே ஜோடி, ஸ்பெயினின் மார்டினஸ், ரே கார்சியா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை இரு செட்டும் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இரண்டு ஜோடியும் தலா ஒரு செட்டை வசப்படுத்தினர். அடுத்து நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' இந்திய ஜோடி 12-10 என போராடி கைப்பற்றியது. இரண்டு மணி நேரம், 3 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-7, 7-6, 12-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் ஜப்பானின் அரே, மோரிசகி ஜோடியை எதிர்கொள்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை