மேலும் செய்திகள்
ஆஸி., ஓபன் டென்னிசில் சின்னர் மீண்டும் சாம்பியன்
26-Jan-2025
மெல்போர்ன்: காது கேளாதோருக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் இந்தியாவின் பிரித்வி சேகர் சாம்பியன் ஆனார்.மெல்போர்னில் காது கேளாதோருக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பிரித்வி சேகர் 31, பங்கேற்றார். ஒற்றையர் பைனலில் பிரித்வி, பிரான்சின் ஆலிவியர் கிரேவை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். காது கேளாதோருக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கோப்பை வென்று அசத்தினார். இரட்டையர் பிரிவில் இம்முறை பிரித்வி, மார்கோ (இத்தாலி) ஜோடி, மூன்றாவது சுற்றில் 6-4, 3-6, 7-10 என பிரான்சின் ஆலிவியர், மைக்கேல் ஜோடியிடம் வீழ்ந்தது.
26-Jan-2025