உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / டென்னிஸ்: பைனலில் இந்திய ஜோடி

டென்னிஸ்: பைனலில் இந்திய ஜோடி

ஹாங்சூ: ஹாங்சூ ஓபன் டென்னிஸ் பைனலுக்கு இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி முன்னேறியது.சீனாவில், ஹாங்சூ ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, கிரீசின் ஏரியல் பெஹர், அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடியை சந்தித்தது.முதல் செட்டை 0-6 என இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6-2 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' மீண்டும் அசத்திய இந்திய ஜோடி 10-4 என வென்றது.ஒரு மணி நேரம், 11 நிமிடம் நீடித்த போட்டியில் ஜீவன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி 0-6, 6-2, 10-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.பாம்ப்ரி அபாரம்: சீனாவில் நடக்கும் செங்டு ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஒலிவெட்டி ஜோடி 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் குரோஷியாவின் இவான் டோடிக், பிரேசிலின் ரபெல் மாடோஸ் ஜோடியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ