டென்னிஸ்: அரையிறுதியில் இந்திய ஜோடி
ஹாங்சூ: சீனாவில், ஹாங்சூ ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, பிரிட்டனின் ஜூலியன் காஷ், லாய்டு கிளாஸ்பூல் ஜோடியை சந்தித்தது. 'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 6-7 என இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 7-6 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய இந்திய ஜோடி 10-8 என வென்றது.இரண்டு மணி நேரம் நீடித்த போட்டியில் அசத்திய ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி 6-7, 7-6, 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.பாம்ப்ரி அபாரம்சீனாவில் நடக்கும் செங்டு ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஒலிவெட்டி ஜோடி 5-7, 6-3, 12-10 என ஈகுவடாரின் கான்சலோ எஸ்கோபார், டியாகோ ஹிடால்கோ ஜோடியை வீழ்த்தியது.