உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / தேசம் மாறிய அனஸ்டாசியா

தேசம் மாறிய அனஸ்டாசியா

வியன்னா: ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை அனஸ்டாசியா போடபோவா 24. பில்லி ஜீன் கோப்பை (பி.ஜே.கே.,) தொடரில் 2018, 2019ல் பங்கேற்றார். உலகத் தரவரிசையில் 51 வது இடத்தில் உள்ளார். உக்ரைன் போர் காரணமாக, பி.ஜே.கே., தொடரில் ரஷ்யா பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரியா குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தார் அனஸ்டாசியா. இது ஏற்கப்பட்ட நிலையில், வரும் போட்டிகளில் ஆஸ்திரியாவுக்காக விளையாட உள்ளார். மற்றொரு ரஷ்ய வீராங்கனை கசட்கினா, சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். துருக்கி கால்பந்து வீரர்கள் கைதுஇஸ்தான்புல்: துருக்கி கால்பந்து 'பெட்டிங்' உலகத்தில் சிக்கித் தவிக்கிறது. இது தொடர்பாக, துருக்கி கால்பந்து கூட்டமைப்பு சார்பில், கடந்த மாதம் 100க்கும் அதிகமான வீரர்கள், 150 க்கும் மேற்பட்ட நடுவர்கள், 'டிவி' வர்ணனையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. முடிவில், சந்தேகத்திற்கு இடமான 46 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. நேற்று அதிகாலை துருக்கியின் மெர்ட் ஹகன், பால்டசி உள்ளிட்ட முன்னணி கிளப் அணி வீரர்களிடம் 'ரெய்டு' நடத்தப்பட்டு, 35 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் நடுவர் ஜோர்பே, குகுக் உள்ளிட்டோரும் கைதாகினர். மும்பை எமிரேட்ஸ் ஏமாற்றம்துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), சர்வதேச லீக் 'டி-20' 4வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் மும்பை எமிரேட்ஸ், கல்ப் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. மும்பை அணியின் (163/6) இலக்கைத் துரத்திய ஜெயன்ட்ஸ் அணி (164/4) 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. 42 பந்தில் 81 ரன் விளாசிய நிசங்கா, ஆட்டநாயகன் ஆனார்.* கென்யாவில் டேக்வாண்டோ உலக சாம்பியன்ஷிப் (21 வயதுக்கு உட்பட்டோருக்கான) நடக்கிறது. ஆண்கள் 54 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அன்கித் மெர், 0-2 (0-0, 8-15) என எகிப்தின் பெல்லாவிடம் தோற்று, வெள்ளிப்பதக்கம் பெற்றார்.* உ.பி., கபடி லீக் இரண்டாவது சீசன், நொய்டாவில் டிசம்பர் 24 முதல் 2026, ஜனவரி 10 வரை நடக்க உள்ளது.* மத்திய பிரதேசத்தின் சர்வாக்யா சிங் (3 ஆண்டு, 7 மாதம், 13 நாள்), 'பிடே' ரேபிட் தரவரிசையில் இடம் பெற்ற உலகின் இளம் வீரர் என பெருமை பெற்றார். * டேவிஸ் கோப்பை குரூப் ஸ்டேஜ் போட்டி இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன. இப்போட்டி 2026, பிப்ரவரி 7-8ல் பெங்களூருவில் நடக்க உள்ளது.* இந்தியன் பிக்கிள் பால் லீக் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் சென்னை அணி இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 18 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ