உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / அன்கிதா ஜோடி அபாரம் * சாலஞ்சர் டென்னிசில்...

அன்கிதா ஜோடி அபாரம் * சாலஞ்சர் டென்னிசில்...

ஜிங்ஷன்: சீனாவில் பெண்களுக்கான சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ருடுஜா போசாலே ஜோடி, தென் கொரியாவின் நா ரி கிம், சீனாவின் செங்இயி யுவான் ஜோடியை எதிர்கொண்டாது. துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி, இரு செட்டுகளையும் எளிதாக வசப்படுத்தியது.ஒரு மணி நேரம், ஒரு நிமிடம் நடந்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரியா பாட்யா, சீனாவின் ஜின்யு காவோவை சந்தித்தார். முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய ரியா, அடுத்த செட்டை 1-6 என நழுவவிட்டார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது, கடைசி செட்டை ரியா 6-3 என வென்றார். ஒரு மணி நேரம், 57 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் ரியா, 6-4, 1-6, 6-3 என வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி