உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / அரையிறுதியில் இந்திய ஜோடி

அரையிறுதியில் இந்திய ஜோடி

இந்துார்: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் தக்சினேஷ்வர், பரிக்சித் ஜோடி முன்னேறியது.மத்திய பிரதேசத்தில் ஆண்களுக்கான டென்னிஸ் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தக்சினேஷ்வர், பரிக்சித் ஜோடி, இந்தியாவின் சித்தார்த், ஜப்பானின் இனுய் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 5-7 என இழந்தது. பின் சுதாரித்துக் கொண்ட இந்திய ஜோடி அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டைபிரேக்கர்' நடந்தது. இதை இந்திய ஜோடி 12-10 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 25 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்தியாவின் தக்சினேஷ்வர் ஜோடி 5-7, 6-3, 12-10 என வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.நேற்று நடந்த ஒற்றையர் இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் தக்சினேஷ்வர், ரஷ்யாவின் ஜூகோவிடம் 4-6, 6-3, 4-6 என போராடி தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ