மேலும் செய்திகள்
பிரார்த்தனா ஜோடி ஏமாற்றம்
19-May-2025
டெஹ்ரான்: ஈரானில் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் கரண் சிங், ரஷ்யாவின் அலெக்சாண்டர் லோபனோவை சந்தித்தார். முதல் செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை கரண் சிங் 7-6 என வசப்படுத்தினார். அடுத்த செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார். ஒரு மணி நேரம், 41 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் கரண் சிங் 7-6, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் அரங்கில் முதன் முதலாக கோப்பை வென்றார். ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் பிரஜ்வல் தேவ், நிதின் குமார் ஜோடி 6-3, 7-6 என இந்தியாவின் கேஷர்வானி, அதர்வா ஜோடியை வீழ்த்தி, கோப்பை வென்றது.
19-May-2025