உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / டென்னிஸ்: ஸ்மிருதி அபாரம்

டென்னிஸ்: ஸ்மிருதி அபாரம்

மைசூரு: மைசூரு ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் காலிறுதிக்கு இந்தியாவின் ஸ்மிருதி முன்னேறினார்.இந்தியாவின் மைசூருவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்மிருதி, சக வீராங்கனை ஹர்ஷினியை எதிர்கொண்டார். முதல் செட்டை ஸ்மிருதி 3-6 என இழந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர், அடுத்த செட்டை 6-4 என கைப்பற்றினார்.வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது செட் 'டை பிரேக்கர்' வரை நீடித்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட ஸ்மிருதி, 7-6 என வசப்படுத்தினார். இரண்டு மணி நேரம், 56 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், ஸ்மிருதி 3-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.மற்ற இரண்டாவது சுற்று போட்டிகளில் இந்தியாவின் லட்சுமி பிரபா, ரியா பாட்யா, பூஜா உள்ளிட்டோர் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ