உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / மாயா ஜோடி சாம்பியன்

மாயா ஜோடி சாம்பியன்

புளோரிடா: ஐ.டி.எப்., டென்னிசில் இந்தியாவின் மாயா ஜோடி சாம்பியன் ஆனது.அமெரிக்காவின் புளோரிடாவில், பெண்களுக்கான போர்ட் லாடர்டேல் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் (18 வயதுக்கு உட்பட்டோர்) நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில், இத்தொடரில் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 16 வயது மாயா ரேவதி, செர்பியாவின் அனஸ்டாசியா சிவெட்கோவிச் ஜோடி, 'நம்பர்-5' அந்தஸ்து கொண்ட அமெரிக்காவின் தியா புரோடின், வெல்லஸ் நியூமன் ஜோடியை சந்தித்தது.முதல் செட்டை மாயா ஜோடி 3-6 என இழந்தது. அடுத்து சுதாரித்த மாயா ஜோடி, இரண்டாவது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது. இதை மாயா ஜோடி 10-5 என வசப்படுத்தியது. முடிவில் மாயா ஜோடி 3-6, 6-2, 10-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை கைப்பற்றியது.ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற மாயா, முதல் சுற்றில் 0-6, 3-6 என அமெரிக்காவின் அனிதா டுவிடம் தோல்வியடைந்தார். தரவரிசையில் முன்னேற்றம்இரட்டையரில் கோப்பை வென்றதை அடுத்து, சர்வதேச ஜூனியர் டென்னிஸ் தரவரிசையில் மாயா, 38 வது இடத்துக்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ