மேலும் செய்திகள்
கரைபுரளுது லஞ்ச 'ஆறு' கடிவாளம் போடுறது யாரு?
21-Oct-2025
ரியாத்: டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் 'பைனல்ஸ்' தொடரின் அரையிறுதிக்கு ரிபாகினா முன்னேறினார்.சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் 'பைனல்ஸ்' தொடர் நடக்கிறது. பெண்கள் தரவரிசையில் 'டாப்-8' இடத்திலுள்ள வீராங்கனைகள் மட்டும், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கின்றன. இதன் செரினா வில்லியம்ஸ் பிரிவில் ஸ்வியாடெக் (போலந்து), அமண்டா அனிசிமோவா, மடிசன் கீஸ் (அமெரிக்கா), ரிபாகினா (கஜகஸ்தான்) உள்ளனர். முதல் போட்டியில் ரிபாகினா, அனிசிமோவாவை வென்றார்.இரண்டாவது போட்டியில் ரிபாகினா, 3-6, 6-1, 6-0 என்ற கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தினார். தொடர்ந்து இரு வெற்றி பெற்ற ரிபாகினா, பட்டியலில் 'டாப்-2' இடத்தை உறுதி செய்து, அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் அனிசிமோவா, 4-6, 6-3, 6-2 என மடிசன் கீசை வென்றார். இரு போட்டியில் தோற்ற மடிசன் அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
21-Oct-2025