உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா

ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கியமன்ற துவக்க விழா நடந்தது. பள்ளி தாளாளர் தனராஜ் தலைமை வகித்தார். ஆசிரியை மெர்சிரோஸ்லின் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியை பிளவர்மேரி முன்னிலை வகித்தார். ஆங்கிலமொழி சிறப்பு பற்றி சுவாமிமலை தமிழாசிரியர் தங்கபசுபதி வரதராஜன்பேட்டை ஆசிரியை பெல்சிகரோலின் ஆகியோர் விளக்கி பேசினர். பெண் விடுதலை பற்றி நாடகம் நடித்து காட்டினர். இதை தொடர்ந்து போதை ஒழிப்பு கடத்தல், எதிர்ப்பு விழிப்புணர்வு பற்றிய பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, நடன போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ