உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / பூண்டி கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் விழா

பூண்டி கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் விழா

அரியலூர்: அரியலூர் அருகே பூண்டி கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நிறைவு விழா நடந்தது. அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே, பூண்டி கிராமத்தில் நடந்த சிறப்பு மனுநீதிநாள் முகாம் நிறைவு விழாவுக்கு, மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., வரவேற்றார். முதியோர் உதவிதொகை, பட்டா மாற்றம், வீட்டு மனைப்பட்டா, இயற்கை இறப்பு நிவாரண உதவி, திருமண உதவி திட்டம், வேளாண் துறை உள்ளிட்ட திட்டங்களின் கீழ், 181 பயனாளிகளுக்கு, 10 லட்சத்து 45 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அனு ஜார்ஜ் வழங்கி பேசினார். கால்நடை பராமறிப்புத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. சிறப்பு மனுநீதிநாள் முகாம் நிறைவு விழாவில், பூண்டி பஞ்சாயத்து தலைவர் சாம்பசிவம், ஒன்றிய கவுன்சிலர் துரைபாலன், பஞ்சாயத்து துணை தலைவர் லூர்துசாமி, பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு உதவி கலெக்டர் ராதாமணி, பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் மலர்விழி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வசந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மனோகரன், ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிரபாகரன், வேளாண் உதவி இயக்குநர் லதா, தாட்கோ மேலாளர் பானுமதி, நில அளவைதுறை உதவி இயக்குநர் விஜயகுமார், மாற்றுத்திறனாளிகள் நலதுறை வல்லுநர் சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முகுந்தன், ஆர்.ஐ., சண்முகசுந்தரி, மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அரியலூர் தாசில்தார் முத்துவடிவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ