உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / அரியலூரில் பசுமை தாயகம் மனித சங்கிலி

அரியலூரில் பசுமை தாயகம் மனித சங்கிலி

அரியலூர்: அரியலூரில் பா.ம.க.,வின் பசுமை தாயகம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. பா.ம.க.,வின் சார்பு அமைப்பான பசுமை தாயகம் துவக்க நாளான நேற்று, தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பது, டூவீலர் ஓட்டுகிறவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவது. வாகனங்களில் செல்லும் போது பாதுகாப்பு பெல்ட்டை கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு செயல்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் சாலை விபத்துகளை தவிர்க்கலாம் என்ற நோக்கத்தை வலியுறுத்தி, அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட பசுமை தாயகம் அமைப்பு சார்பாக, நேற்று அரியலூர் நகராட்சி அலுவலகம் முதல், தேரடி வரை நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு, பா.ம.க., மாவட்ட செயலாளர் வைத்தி தலைமை வகித்தார். நகர செயலாளர் கோவிந்தசாமி வரவேற்றார். மனித சங்கிலி போராட்டத்தை பா.ம.க., மாநில துணை பொதுசெயலாளர் பாலு துவக்கி வைத்து பேசினார். இதில் பா.ம.க., மாநில நிர்வாகி உலக சாமிதுரை, வேப்பூர் பஞ்.,யூனியன் சேர்மன் நீலமேகம், அரியலூர் ஒன்றிய செயலாளர் செம்மலை, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ